ஞாயிறு, 17 அக்டோபர், 2010

காத்திருக்கிறேன்.

                   


                        எனக்காக காத்திருக்க
                               வேண்டும் எனச் சொன்னாய்.

                        சரி என நானும் சம்மதித்தேன்.

                        இது வரை என நீயும்
                        சொல்லவில்லை.

                        நானும் கேட்கவில்லை.

                        நீ திருமணம் முடிந்து சென்று
                            விட்டாய் எனக் கேள்விப்பட்டேன். 

                       இருந்தும் காத்திருக்கிறேன்.

                       என்றாவது என் ஞாபகம்
                       வந்து திரும்ப வருவாய் என்ற
                       நம்பிக்கையோடு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக